/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கே.வி.பி., பங்குகளை வாங்கும் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு
/
கே.வி.பி., பங்குகளை வாங்கும் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு
கே.வி.பி., பங்குகளை வாங்கும் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு
கே.வி.பி., பங்குகளை வாங்கும் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு
ADDED : ஆக 25, 2024 12:27 AM

சென்னை:கரூர் வைஸ்யா வங்கியின் 9.99 சதவீத பங்குகளை வாங்க, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்ட, தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின், தற்போதைய சந்தை மதிப்பு 17,780 கோடி ரூபாயாக உள்ளது.
இது குறித்து, கரூர் வைஸ்யா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பங்குகளை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த நாளில் இருந்து, ஓராண்டுக்குள் பங்குகளை வாங்க வேண்டும். தவறும்பட்சத்தில், இந்த ஒப்புதல் ரத்தாகி விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.