/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
நுண்கடன் வழங்கல் 36 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது
/
நுண்கடன் வழங்கல் 36 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது
ADDED : பிப் 26, 2025 11:32 PM

கோல்கட்டா:கடந்த டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், நுண்கடன் வழங்குவது 36 சதவீதம் வீழ்ச்சி கண்டதாக, நுண்கடன் நிறுவனங்கள் நெட்வொர்க்கான எம்.பின்., தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நுண்கடன் நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகை 22,091 கோடி ரூபாய். முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இது 35.80 சதவீதம் குறைவு.
மதிப்பீட்டு காலத்தில், ஒரு கணக்குக்கு சராசரியாக வழங்கப்பட்ட கடன் 51,691 ரூபாய். இது முந்தைய ஆண்டின், இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 15.20 சதவீதம் அதிகம்.
கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, கடன் பெற்று 30 நாட்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத, அபாய கட்டமாக கருதப்பட்ட கணக்குகள் 8.80 சதவீதமாக அதிகரித்தன. இது 2023 டிசம்பர் 31 நிலவரப்படி, 3.50 சதவீதமாக இருந்தது.
எம்.பின்., தலைமைச் செயல் அதிகாரி அலோக் மிஸ்ரா கூறுகையில், வாராக்கடன், கடன் நிலுவையை கணக்குகளில் இருந்து ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் கடுமையானதால், நுண்கடன் துறை சவாலான நிலையை சந்திப்பதுடன் கடன் வழங்குவதும் குறைந்துள்ளது என்றார்.