sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

தனிநபர் கடன் பெறும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

/

தனிநபர் கடன் பெறும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

தனிநபர் கடன் பெறும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

தனிநபர் கடன் பெறும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்


ADDED : ஜூன் 24, 2024 01:07 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுகிய கால நோக்கில் கடன் தேவை ஏற்படும் போது தனிநபர் கடன் வசதி ஏற்றதாக அமைகிறது. மருத்துவ நெருக்கடி துவங்கி, விடுமுறை பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கடன் வசதியை நாடலாம்.

மற்ற கடன்களோடு ஒப்பிடும் போது, சிக்கலான செயல்முறைகள் இல்லாமல்எளிதாகக் கிடைக்கும் என்பது தனிநபர் கடனின் சாதகமான அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. எனினும், கடனை திருப்பிச் செலுத்துவதும் சிக்கல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.

அதிக தவணை:


தனிநபர் கடன் காலத்திற்கு ஏற்ப மாதத்தவணை அமையும். குறைந்த காலம் எனில் மாதத்தவணை அதிகமாக இருக்கும். இதன் வாயிலாக் கடனை சீக்கிரம் அடைக்கலாம் என்றாலும் தவணை அதிகமாக இருக்கும். மாதந்தோறும் செலுத்த திணற வைக்கும் வகையில் தவணை தொகை இருக்கக் கூடாது.

சரியான தொகை:


கடன் காலம் அதிகமாக இருந்தால் மாதத்தவணை தொகை குறைவாக இருக்கும். ஆனால்,

திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும். எனவே, குறைந்த தொகை என்று பார்க்காமல், கடனை அடைக்க சிக்கல் இல்லாமல் செலுத்தக்கூடிய தவணையை தேர்வு செய்ய வேண்டும்.

கடன் ஒப்பீடு:


பணம் தேவைப்படுகிறது என்பதால் அவசரமாக கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். கடனுக்கான வட்டி விகிதம், நிபந்தனைகள் போன்ற அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்து பொருத்தமான கடன் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். கடன் தொடர்பான கட்டணங்களையும் அறிய வேண்டும்.

கணக்கில் பணம்:


கடன் தவணைக்கான பணம் வங்கி கணக்கில் இருந்து பெறப்படும் என்பதால், சேமிப்பு கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும். ஒரு தவணைக்கான உபரித் தொகை இருப்பது நல்லது. கணக்கில் போதிய பணம் இல்லாத போது, தவணை செலுத்துவது தவறுவதோடு, அபராதம் விதிக்கப்படலாம்.

உபரித் தொகை:


கடன் காலத்தில் எதிர்பாராத விதமாக உபரித் தொகை ஏதேனும் கிடைத்தால், அசலின் ஒரு பகுதியை அடைக்க அதைப் பயன்படுத்திக்கொள்ள தவறக்கூடாது.அதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன் பெற முயற்சிக்கக் கூடாது. இது கடன் வரலாறை பாதித்து கிரெடிட் ஸ்கோரிலும் தாக்கம் செலுத்தும்.






      Dinamalar
      Follow us