/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
11 கோடியை நெருங்கியது கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை
/
11 கோடியை நெருங்கியது கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை
11 கோடியை நெருங்கியது கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை
11 கோடியை நெருங்கியது கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை
ADDED : பிப் 27, 2025 11:05 PM

புதுடில்லி:நாட்டில் புழக்கத்திலுள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 11 கோடியை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் புதிதாக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளோடு சேர்த்து, மொத்த கார்டுகளின் எண்ணிக்கை 10.89 கோடியாக உள்ளது.
கடந்தாண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜனவரியில் புதிய கிரெடிட் கார்டு வழங்கல் 9.50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எச்.டி.எப்.சி., -- எஸ்.பி.ஐ., - ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகிய வங்கிகளே இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
கடந்த மாதம் மொத்தம் 8.20 லட்சம் கிரெடிட் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்ட நிலையில், 7.20 லட்சம் கார்டுகளை இந்த மூன்று வங்கிகள் மட்டுமே வழங்கியுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சம் கார்டுகளை பிற வங்கிகள் வழங்கியுள்ளன.
தனிநபர் கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் வாராக் கடன் சிக்கல்கள் காரணமாக, சிறிய வங்கிகள் தங்களது கிரெடிட் கார்டு வினியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, கடந்தாண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கிரெடிட் கார்டு வாயிலான செலவினம் 2.10 சதவீதம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பரில் 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கிரெடிட் கார்டு செலவினம், கடந்த மாதம் 1.85 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும், கடந்தாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10.60 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதம் தனியார் வங்கிகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வாயிலான செலவினம் 6.60 சதவீதமும்; இண்டஸ்இண்ட் வங்கியில் 5.50 சதவீதமும்; எச்.டி.எப்.சி.,யில் 4.70 சதவீதமும் சரிந்திருந்தன.