/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் 'வாலாட்ட' முடியாது
/
நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் 'வாலாட்ட' முடியாது
நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் 'வாலாட்ட' முடியாது
நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் 'வாலாட்ட' முடியாது
ADDED : செப் 05, 2024 03:23 AM

புதுடில்லி:நிதி மோசடியில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் குறித்த விபரங்களை வங்கிகள் தொகுத்து, புதிய பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளன. இதில், பல துறைகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பெயர்கள், விபரங்கள் இடம்பெற்று உள்ளன.
இது குறித்து வங்கி உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மாதம் நடைபெற்ற வங்கி மற்றும் நிதி மோசடிகள் தடுப்புக்கான ஆலோசனை வாரிய கூட்டத்தில், மோசடியாளர்கள் குறித்த ஒருங்கிணைப்பு பட்டியல் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, தொகுக்கப்பட்ட பட்டியலை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முன்னர், ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், தொடர்ந்து தகவல்களை அதில் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.
கடந்த ஜூலை 15ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட மோசடி வகைகளின் வழிகாட்டுதல்களை சேர்த்தால், மோசடி பேர்வழிகள் பட்டியல் இன்னமும் நீண்டு கொண்டே செல்லும். வங்கி அலுவலர்கள், தொடர்ச்சியாக எச்சரிக்கை பட்டியலை சரிபார்ப்பதில்லை. இது மோசடி நிறுவனங்கள் மீண்டும் நிதி அமைப்பிற்குள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, தங்கள் கிளைகளுக்கு வங்கிகள் உள்சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மோசடியாளர்களின் மீது வங்கிகள் தனிப்பட்ட நடவடிக்கை எடுப்பதால், வேறு வங்கிகளில் தொடர்ந்து கடன் பெற்று மோசடி செய்ய வாய்ப்பாகிறது. இந்த பட்டியல் வாயிலாக, மோசடியாளர்களின் தொடர்புகளை, வங்கிகள் களைய முடியும்.