/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கி கடனுக்கான வட்டி சிறிது உயர்வு
/
வங்கி கடனுக்கான வட்டி சிறிது உயர்வு
ADDED : நவ 04, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சராசரி கடன் அளிப்பு வட்டி விகிதத்தில், தனியார் வங்கிகள் 14 அடிப்படை புள்ளிகளை அதிகரித்ததால், புதிதாக பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 10.19 சதவீதத்தில் இருந்து 10.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வணிக வங்கிகளின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 9.37 சதவீதத்தில் இருந்து 9.41 சதவீதமாக, அதாவது, 0.04 சதவீதம் உயர்ந்த நிலையில், தனியார் வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 14 புள்ளிகள் உயர்ந்திருப்பது, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரத்தில் தெரிய வந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் சராசரி கடன் அளிப்பு விகிதம், செப்டம்பரில் 8.60 சதவீதத்தில் இருந்து 8.57 சதவீதமாக, 0.03 சதவீதம் குறைந்துள்ளது.