/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கி டெபாசிட் இரு மடங்காக உயர்வு
/
வங்கி டெபாசிட் இரு மடங்காக உயர்வு
ADDED : ஜன 15, 2024 01:15 AM

வங்கிகளின் டெபாசிட் தொகை இரு மடங்காக அதிகரித்து, 200 லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 200 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் இது 100 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஏழு ஆண்டுகள் மூன்று மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
வங்கி டெபாசிட் தொகையில் 50 லட்சம் கோடி ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்களில் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு 20 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின், கடன் வளர்ச்சி அதிகரித்தால் வங்கிகள் அதிக வட்டி மூலம் டெபாசிட் திரட்டி வருகின்றன.
கடந்த 2022- - 23 ஆண்டு காலத்தில் டெபாசிட் வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருந்தது.
பண மதிப்பு நீக்கம் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைக்கும் உத்தரவு ஆகியவை, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.