/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
4 வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு
/
4 வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு
ADDED : நவ 19, 2024 11:05 PM

புதுடில்லி:செபி விதிமுறையை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசு நான்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள அதன் பங்குகளில், சிறிய அளவை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்குகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம், பொதுமக்களிடம் இருப்பதை ஆகஸ்ட் 2026க்குள் உறுதி செய்ய, செபி விதிமுறையை வெளியிட்டுள்ளது.
செபியின் விதியை நிறைவு செய்யும் வகையில், பொதுத்துறை வங்கிகளான 'இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ பேங்க் மற்றும் பஞ்சாப் அண்டு சிந்து பேங்க்' ஆகியவற்றில் உள்ள தனது பங்குகளை, குறைத்துக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை, மத்திய நிதியமைச்சகம் பெற திட்டமிட்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

