எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.1,000 கோடிக்கு ஆர்டர் பெற்றது சி.எம்.எஸ்.,
எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.1,000 கோடிக்கு ஆர்டர் பெற்றது சி.எம்.எஸ்.,
ADDED : ஜன 08, 2026 01:08 AM

மும்பை: ஏ.டி.எம்.,சேவை தொடர்பாக பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.,யிடம் இருந்து 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்று உள்ளதாக சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது முதல் மென்பொருள் தீர்வுகள் வரை பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.
இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 'எஸ்.பி.ஐ., உடன் 10 ஆண்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏ.டி.எம்., சேவைகள், ரொக்கம் கிடைப்பதை மேம்படுத்தல், தடையின்றி ஏ.டி.எம்.,செயல்படுவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
நாடு முழுதும் 5,000 ஏ.டி.எம்.,களை நிர்வகிக்க, பொதுத்துறையை சேர்ந்த வங்கி, நேரடியாக எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்' என்று தெரிவித்துள் ளது.
