/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
மானியம், கடன் பெற 'உத்யம்' சான்று ஆர்வம் காட்டும் தமிழக நிறுவனங்கள்
/
மானியம், கடன் பெற 'உத்யம்' சான்று ஆர்வம் காட்டும் தமிழக நிறுவனங்கள்
மானியம், கடன் பெற 'உத்யம்' சான்று ஆர்வம் காட்டும் தமிழக நிறுவனங்கள்
மானியம், கடன் பெற 'உத்யம்' சான்று ஆர்வம் காட்டும் தமிழக நிறுவனங்கள்
ADDED : பிப் 17, 2024 01:11 AM

சென்னை:மத்திய அரசின் மானிய திட்டங்களுக்கும், வங்கிகளில் கடன் பெறவும், 'உத்யம்' சான்று அவசியம். அதை பெற தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால், கடந்த ஓராண்டில் கூடுதலாக, எட்டு லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 'உத்யம்' சான்று வழங்குகிறது.
இந்த சான்றை பெறுவதற்காக, 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது, காகிதப் பயன்பாடற்ற, சுய விபரங்களை அடிப்படையாக கொண்ட ஒரு பதிவாகும்.
தமிழகத்தில், 'உத்யம்' சான்று பதிவு செய்ய, தமிழக அரசின் மாவட்ட தொழில் மையங்கள் உதவுகின்றன.
தொழிலை துவக்கவும், விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், வங்கிகளில் கடன் பெறவும், 'உத்யம்' சான்று அவசியம்.
எனவே, தமிழக அரசின் திட்டங்களிலும் அந்த சான்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப் படி, நாடு முழுதும், 3.79 கோடி தொழில் நிறுவனங் கள், 'உத்யம்' சான்றுக்கு பதிவு செய்துள்ளன. அவற்றின் வாயிலாக, 17.15 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் வரை, 14.93 லட்சம் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் கூடுதலாக, 8.28 லட்சம் நிறுவனங்கள் என, மொத்தம் தமிழகத்தில், 23.21 லட்சம் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்துள்ளன.
இதனால்,1.25 கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.