/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கிரெடிட் கார்டு வழங்கல் 45 சதவிகிதம் குறைந்தது
/
கிரெடிட் கார்டு வழங்கல் 45 சதவிகிதம் குறைந்தது
ADDED : நவ 26, 2024 10:35 PM

புதிய கிரெடிட் கார்டு வினியோகம், கடந்த அக்டோபர் மாதத்தில் 45 சதவீதம் சரிந்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதிதாக 16 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு அக்டோபரில், இது 7.80 லட்சமாக சரிந்துள்ளது. எனினும், இது கடந்த மே மாதத்தில் இருந்த 7.6 லட்சத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாகும்.
கடந்த மாதம் கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட செலவு 13 சதவீதம் அதிகரித்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையே, அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. மேலும், முதன்மை கிரெடிட் கார்டு போக, குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கப்படும் கூடுதல் கிரெடிட் கார்டுகளும் சீராக வளர்ச்சியடைந்துள்ளன.