/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
அன்னிய செலாவணி ரூ.51.66 லட்சம் கோடியாக உயர்வு
/
அன்னிய செலாவணி ரூ.51.66 லட்சம் கோடியாக உயர்வு
ADDED : பிப் 10, 2024 12:44 AM

மும்பை:கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 47 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, கிட்டத்தட்ட 51.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 47 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, கிட்டத்தட்ட 51.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது-.
முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 4,905 கோடி ரூபாய் அதிகரித்து 51.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டுக்கான வாரத்தில், தங்கம் கையிருப்பு 5,046 கோடி ரூபாய் அதிகரித்து 3.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.