/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஆர்.பி.ஐ., கவர்னர் பெயரில் மோசடி வீடியோ பதிவுகள்
/
ஆர்.பி.ஐ., கவர்னர் பெயரில் மோசடி வீடியோ பதிவுகள்
ADDED : நவ 19, 2024 11:28 PM

மும்பை:ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு ஆலோசனை வழங்குவது போல, போலி வீடியோ, இணையத்தில் பரவி வருவதாகவும், இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:
புதிய முதலீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்; வேறு சில முதலீட்டு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசுவதுபோல, போலி வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவது தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற வீடியோக்களை சிலர் தயாரித்து வெளியிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் யாரும் இதுபோன்று முதலீட்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசுவதில்லை. ரிசர்வ் வங்கியும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதில்லை. எனவே, இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை.
எனவே, மோசடி பேர்வழிகளின் சதித் திட்டத்துக்கு மக்கள் இரையாக வேண்டாம் என, கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.