/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி
/
பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி
பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி
பணக்காரர் வரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி
ADDED : ஜன 05, 2024 11:58 PM

புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில், முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் தரவரிசை குறித்த, 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்' பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 12வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து, இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி தற்போது உள்ளார்.
முன்னதாக, கடந்த டிசம்பரில் இந்த தரவரிசையில், அதானி 15வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 14வது இடத்திலும் இருந்தனர். இதை தொடர்ந்த காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 63,661 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதன் வாயிலாக, அதானியின் சொத்து மதிப்பு 8.10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து. இதன் காரணமாக, தற்போது 12வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி, 13வது இடத்தில் உள்ளார்.
அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக, 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இதை தொடர்ந்து, அதானி குழும பங்கு விலை பெரும் சரிவை கண்டன. இதனால் அதானியின் சொத்து மதிப்பு, 60 சதவீதம் வரை சரிந்தது. இந்த நிலையில், தற்போது முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார்.