/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிகள் மீது புகார் அதிகரிப்பு
/
வங்கிகள் மீது புகார் அதிகரிப்பு
ADDED : மார் 19, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2006ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியால், ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் புகார்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் அதிகரிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக, வங்கிச் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாக தீர்வு காணலாம்.
- சஞ்சய் மல்ஹோத்ரா
கவர்னர், ரிசர்வ் வங்கி