/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'உலக மந்தநிலையால் பாதிக்காத இந்தியா அதிக வளர்ச்சி காணும் நாடாக நீடிக்கும்'

ADDED : அக் 22, 2025 12:13 AM

மும்பை :சர்வதேச நிச்சயமற்ற சூழல்களால் பாதிக்கப்படாமல், பொருளாதார அடித்தளத்தால் மீள்தன்மையுடன் இந்திய வளர்ச்சி இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறியதாவது:
உலக நாடுகளின் பொருளாதார நிச்சயமற்றதன்மைகளால் பாதிப்பின்றி, இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வளர்ச்சி காணும் நாடாக நீடிக்கிறது. உள்நாட்டு தேவை, திறன் பயன்பாடு ஆகிய காரணிகளால், முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி, சேவைகள் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வரும் நிலையில், பணவீக்கம் தொடர்ந்து திட்டமிட்ட இலக்குக்கு கீழே நிலவி வருகிறது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற தேவை புத்துயிர் பெற்று வருகின்றன. நுகர்வோர் விலை பணவீக்க குறியீடு, செப்டம்பரில் கடந்த 2017 ஜூன் மாதத்துக்கு பிறகு, மிகக் குறைவாக பதிவானது.
இந்திய பொருளாதார வளர்ச்சியை 0.20 சதவீதம் உயர்த்தி, 6.60 சதவீதமாக பன்னாட்டு நிதி அமைப்பு கணித்திருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பான ஓ.இ.சி.டி.,யும் இந்திய ஜி.டி.பி., இந்த ஆண்டு 6.70 சதவீதம் வளர்ச்சி காணும் என கூறியுள்ளது. இதற்கு முன் இதன் கணிப்பு 6.30 சதவீதமாக இருந்தது.