/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
இண்டஸ்இண்ட் வங்கியில் வலுவான நிதிநிலை: ஆர்.பி.ஐ.,
/
இண்டஸ்இண்ட் வங்கியில் வலுவான நிதிநிலை: ஆர்.பி.ஐ.,
ADDED : மார் 15, 2025 10:44 PM

மும்பை:இண்டஸ்இண்ட் வங்கியின் நிதிநிலை வலுவாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புகள் குறித்து கவலை கொள்ள வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முதலீட்டு வகைப்பாடுகள் குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தியபோது, வங்கியின் முன்பேர வணிக போர்ட்போலியோவில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக இண்டஸ்இண்ட் வங்கி சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தைகளில் தெரிவித்தது. இதையடுத்து வங்கியின் நிதிநிலை குறித்தும், வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் குறித்தும் கேள்வி எழுந்தது.
நிலைமையை தெளிவுபடுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இண்டஸ்இண்ட் வங்கியின் மூலதனமும், நிதிநிலையும் வலுவாகவே உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 16.46 சதவீதமாக உள்ளது.
வாராக்கடன் சுமையை சமாளிப்பதற்கான பி.சி.ஆர்., விகிதமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 70 சதவீதத்துக்கு அதிகமாகவே உள்ளது.
ரொக்க இருப்பு விகிதம் 100 சதவீதமாக இருக்க வேண்டிய நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதி நிலவரப்படி 113 சதவீதமாக, தேவையைக் காட்டிலும் கூடுதலாகவே உள்ளது.
இதனால், ஊகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.