/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சிறுதொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு
/
சிறுதொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு
சிறுதொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு
சிறுதொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு
ADDED : ஜூலை 21, 2025 10:20 PM
புதுடில்லி : சிறுதொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டுகள் வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கென கடன் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிறுதொழில் நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில், வங்கிகள் 5 லட்சம் ரூபாய் உச்ச வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகளை, குறைந்த வட்டியில் வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதைய நடைமுறையில், இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கு 30 முதல் 45 நாட்கள் வரை வட்டி வசூலிக்கப்படுவதில்லை.
இதன் பின், சராசரியாக மாதத்துக்கு 2.50 சதவீதமும்; ஆண்டுக்கு 30 சதவீதம் வரையிலும் வட்டி வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் இதை விட கூடுதலாக வசூலிக்கின்றன.
இந்நிலையில், சிறுதொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கும் பெரு நிறுவனங்கள், அதற்கான பேமென்ட்களை செலுத்த காலதாமதமாகிறது. சில நேரங்களில் 90 நாட்களுக்கு மேல் ஆவதால், சிறு நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகிறது.
இதை கருத்தில் கொண்டு, உத்யம் தளத்தில் பதிவு செய்துள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு என, பிரத்யேகமான கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக 10 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.