/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'8 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை காணமுடியும்'
/
'8 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை காணமுடியும்'
ADDED : மார் 19, 2024 10:44 PM

மும்பை:இந்தியா 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும்; இன்னும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்யக் கூடும் என்றும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021 முதல் நடப்பு 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சராசரி 8 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தற்போதைய உள்நாட்டு பொருளாதார சூழலின் அடிப்படையில், இந்த வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்கவும் முடியும்; இன்னும் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவும் முடியும். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு நல்ல நிலையில் உள்ளது. இந்தியா மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதால், மூலதன வரவு வலுவாக மீண்டெழுந்துள்ளது. இதுதவிர, தொழில்நுட்பம் போட்டித்தன்மையுடனும் திறமையாகவும் மாறி வருவதன் வாயிலாக, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்த சாதகமான காரணிகளை சிறப்பாக பயன்படுத்தி, உள்கட்டமைப்பு, வலுவான உற்பத்தித் தளங்கள், உயர்தர தொழிலாளர் சக்தி மற்றும் சேவைகள் துறையில் உலகிற்கே தலைமை வகித்து செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

