/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஒரே நாளில் மஸ்க் சொத்து ரூ.2.52 லட்சம் கோடி உயர்வு
/
ஒரே நாளில் மஸ்க் சொத்து ரூ.2.52 லட்சம் கோடி உயர்வு
ஒரே நாளில் மஸ்க் சொத்து ரூ.2.52 லட்சம் கோடி உயர்வு
ஒரே நாளில் மஸ்க் சொத்து ரூ.2.52 லட்சம் கோடி உயர்வு
ADDED : அக் 26, 2024 03:58 AM

அமெரிக்க பங்குச் சந்தையில் 'டெஸ்லா' நிறுவனத்தின் பங்குகள் 19 சதவீதம் உயர்வு கண்டதால், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, கிட்டத்தட்ட 22.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் லாபம், கடந்த செப்டம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், 17 சதவீதம் அதிகரித்து இருந்தது.
இதனையடுத்து, டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒரே நாளில் கிட்டத்தட்ட 9.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. மேலும், இந்நிறுவனத்தின் 13 சதவீத பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் கிட்டத்தட்ட 2.52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.