/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
முத்துாட் பைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
/
முத்துாட் பைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி
ADDED : ஜூன் 11, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இதையடுத்து, இந்த மைல்கல்லை எட்டியுள்ள கேரளாவின் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும், சந்தை மதிப்பின் அடிப்படையில், நாட்டின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியலிலும் இந்நிறுவனம் இணைந்துள்ளது. நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்கு விலை 2,570 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை எட்டியது.
இதற்கு முன்பாக, கடந்தாண்டு செப்டம்பரில் 75,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்நிறுவனம் கடந்தது.