/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி எஸ்.பி.ஐ.,க்கு புதிய அங்கீகாரம்
/
உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி எஸ்.பி.ஐ.,க்கு புதிய அங்கீகாரம்
உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி எஸ்.பி.ஐ.,க்கு புதிய அங்கீகாரம்
உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி எஸ்.பி.ஐ.,க்கு புதிய அங்கீகாரம்
ADDED : அக் 24, 2025 03:22 AM

புதுடில்லி: 'உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி 2025, இந்தியாவின் சிறந்த வங்கி 2025' ஆகிய இரண்டு விருதுகளை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.,வென்றுள்ளது.
உலக வங்கி ஆண்டு கூட்டத்தில், அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த குளோபல் பைனான்ஸ், எஸ்.பி.ஐ.,க்கு உலகளாவிய வங்கி விருதுகளை வழங்கி கவுரவித்து உள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டு வருவதிலும், சிறந்த வாடிக்கையாளர் சேவையிலும் எஸ்.பி.ஐ., முன்னணியில் இருப்பதை இந்த அங்கீகாரம் காட்டுகிறது.
வாடிக்கையாளர் தளத்திற்கு உலக தரத்திலான வங்கி சேவைகளை வழங்கியது, தொழில்நுட்பத்தில் தனது ஆளுமையை நிலைநாட்டியது மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தனது சேவைகளை விரிவாக்கம் செய்தது ஆகியவற்றில் வங்கியின் வெற்றியை பாராட்டி இது வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் எஸ்.பி.ஐ., உலக அங்கீகாரம் பெறுவது மிகவும் பெருமையாக உள்ளது
- பியுஷ் கோயல்,
மத்திய வர்த்தக அமைச்சர்

