/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
/
சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
ADDED : ஜூலை 01, 2025 06:43 AM

புதுடில்லி : சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில், ஜூலை - செப்., காலாண்டில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டுக்கு, சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி மாற்றமின்றி தொடரும் என்று கூறப்பட்டுஉள்ளது.
தொடர்ந்து ஆறாவது காலாண்டாக, அதாவது ஒன்றரை ஆண்டாக, சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை.
அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கி, கடன் வட்டியை ஒரு சதவீதம் வரை குறைத்துள்ள நிலையில், பல வங்கிகள் டிபாசிட் வட்டியை குறைத்து வருகின்றன. இந்நிலையிலும், அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை.