/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரூ.2.69 லட்சம் கோடியை அரசுக்கு தரும் ஆர்.பி.ஐ., இதுவரை இல்லாத அதிகபட்ச தொகை

ADDED : மே 24, 2025 12:51 AM

மும்பை:கடந்த 2025ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக 2.69 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் வழங்கிய ஈவுத் தொகையைக் காட்டிலும் அதிகம்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடந்த 616வது இயக்குநர்கள் குழு கூட்டத்தில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த 2025ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக 2.69 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இது கடந்த 2023 - 24ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஈவுத் தொகையை விட 27.40 சதவீதம் அதிகமாகும்.