/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தங்க நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் வரைவு அறிக்கை
/
தங்க நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் வரைவு அறிக்கை
தங்க நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் வரைவு அறிக்கை
தங்க நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் வரைவு அறிக்கை
ADDED : ஏப் 13, 2025 09:52 PM

புதுடில்லி:தங்க நகைக்கடன் வணிக நடைமுறையை சீர்படுத்தும் நோக்கில், வரைவு அறிக்கை ஒன்றை அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கிகள், என்.பி.எஸ்.சி., எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் போன்றவை தற்போது தங்க நகைக்கடன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் கடன் காலத்தை தன்னிச்சையாக நீட்டிப்பது அல்லது குறைப்பது, நகையை மதிப்பிடுவதில் வேறுபாடு, அடமான நகைகளின் பாதுகாப்பு, நகைக்கடன் தொகை நிர்ணயம் ஆகியவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் வேறுபடுகின்றன.
தங்க நகை அடமானக் கடனில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாகவும் ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், தங்க நகைக்கடன் வணிகத்தை முறைப்படுத்தும் நோக்கில், வரைவு அறிக்கையை ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ளது.
தங்க நகைக்கடன் வணிகத்தில் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், கடன் வர்த்தகத்தை மேம்படுத்தி, இருதரப்பு பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த வரைவறிக்கை வெளியிடப்படுவதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இதன் மீது பொதுமக்கள் தங்கள் கருத்தை ஆர்.பி.ஐ., இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.