/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 2 நாட்களில் 28 காசுகள் சரிந்தது
/
தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 2 நாட்களில் 28 காசுகள் சரிந்தது
தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 2 நாட்களில் 28 காசுகள் சரிந்தது
தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 2 நாட்களில் 28 காசுகள் சரிந்தது
ADDED : நவ 07, 2024 10:54 PM

புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், கடந்த இரண்டு நாட்களில் 28 காசு சரிந்துள்ளது. நேற்று ரூபாய் மதிப்பு ஆறு காசு வீழ்ச்சி கண்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் பங்குச் சந்தையில் டாலர் குறியீட்டின் மதிப்பு, நேற்று கிட்டத்தட்ட 1.50 சதவீதம் அதிகரித்து, 104.90 டாலரானது. தொடர்ந்து, டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால், இரண்டாவது நாளாக, நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து, 84.37 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ளதால், கரன்சி வணிகத்தில் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் எச்சரிக்கை காக்கின்றனர். கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்ததும் ரூபாய் மதிப்பில் எதிரொலித்தது.
அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிப்பை, புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு அதிகரிக்கக் கூடும் என்பதும், மற்ற நாடுகளை விட, அமெரிக்காவில் முதலீட்டுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கருதி முதலீட்டு தேர்வாக டாலர் இருப்பதும், ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கியின் தலையீட்டை இந்திய கரன்சி வணிகர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.