/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
எஸ்.பி.ஐ., ரிவார்டு: புதிய மோசடி
/
எஸ்.பி.ஐ., ரிவார்டு: புதிய மோசடி
ADDED : ஜன 16, 2025 10:48 PM

புதுடில்லி:எஸ்.பி.ஐ., பரிசைப் பெற விரும்புகிறீர்களா? ஏ.பி.கே., பைலை பதிவிறக்கம் செய்யுங்கள் என குறுந்தகவல் வந்தால், உஷாராகி விடுங்கள். மோசடி பேர்வழிகள் வங்கியில் இருந்து பணத்தை திருட அனுப்பும் செய்தி அது என, இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது.
இந்த ஏ.பி.கே., பைலை பதிவிறக்கியதும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, நிதிப் பாதுகாப்பு சீர்குலைந்துவிடும் என பி.ஐ.பி.,யின் உண்மை கண்டறியும் பிரிவு கூறியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களை எச்சரித்துள்ள பத்திரிகை தகவல் அலுவலகம், இதுபோன்ற லிங்க்குகளை புறக்கணிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட சரியான இயங்குதள செயலிகள் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, வாட்ஸாப் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களில் ஏ.பி.கே., பைல்களை அனுப்புவதில்லை எனவும்; ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயலிகள், இயக்கங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும் ஏ.பி.கே., முறையை, இணைய குற்றவாளிகள் மோசடியாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மொபைல் போன், டேப்லெட், லேப்டாப்களில் மால்வேர், ஸ்பைவேர் மற்றும் ஊடுருவல் செயலிகளை, சைபர் கிரிமினல்கள் பரப்பி, தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.