/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்
/
பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்
பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்
பேடிஎம் வங்கிக்கு சிக்கல்; கடும் வணிக கட்டுப்பாடுகள்
ADDED : பிப் 01, 2024 12:14 AM

மும்பை,:பிப்ரவரி 29ம் தேதிக்கு பின், 'பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி' டிபாசிட்கள் பெறுவதற்கு, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
வரும் 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர் கணக்கிலும், டிபாசிட்களை பெறுவதற்கோ அல்லது அக்கணக்குகளுடன் இணைக்கப்பட்ட வேலட், பாஸ்டேக் போன்ற பிரீபெய்டு சாதனங்களை டாப்-அப் செய்வதற்கோ, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
வங்கிக்கு எதிரான ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது, தணிக்கை அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிப்ரவரி 29, 2024க்கு பின், எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு அல்லது அக்கணக்குடன் இணைக்கப்பட்ட வேலட்கள், பாஸ்டேக், என்.சி.எம்.சி., கார்டுகள் போன்ற ப்ரீபெய்டு சாதனங்களில், கிரெடிட் செய்யப்படும் வட்டி, கேஷ்பேக்குகள் அல்லது ரீபண்டுகளைத் தவிர, மற்ற டிபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது.
சேமிப்பு வங்கி கணக்குகள், வணிக கணக்குகள், பிரீபெய்ட் கருவிகள் உள்ளிட்டவற்றில் உள்ள இருப்புத் தொகையை, அதன் வாடிக்கையாளர்கள் திரும்ப பெற அல்லது பயன்படுத்த அவற்றின் இருப்பு உள்ளவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.