/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது
/
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது
ADDED : டிச 19, 2024 11:18 PM

நியூயார்க்:அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், கடன் வட்டியை 0.25 சதவீதம் குறைத்து, 4.50 சதவீதத்தில் இருந்து 4.25 சதவீதமாக அறிவித்துள்ளது. அதேபோல, ரிசர்வ் ரெப்போ எனப்படும், வங்கிகளிடம் பெடரல் ரிசர்வ் பெறும் நிதி இருப்புக்கான விகிதத்தை 4.55 சதவீதத்தில் இருந்து 4.25 சதவீதமாக, அதாவது 0.30 சதவீதம் குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பான் கரன்சியான யென், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான், கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல், 0.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவித்துள்ளது.