தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இன்னொரு 'பெகாசஸ்': ஆப்பிள் எச்சரிக்கை

இன்னொரு 'பெகாசஸ்': ஆப்பிள் எச்சரிக்கை

இன்னொரு 'பெகாசஸ்': ஆப்பிள் எச்சரிக்கை


ADDED : ஏப் 11, 2024 09:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 09:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'பெகாசஸ்' போன்ற மற்றொரு வகை உளவு மென்பொருளுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளின் பயனர்களை, 'ஆப்பிள்' நிறுவனம் எச்சரித்துள்ளது.

பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் வாயிலாக, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்கள் 'ஹேக்' செய்யப்பட்டு, அவரகளது உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக, முன்பு பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், தற்போது அதேபோன்ற மற்றொரு உளவு மென்பொருளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு, இந்தியா உட்பட 92 நாடுகளுக்கு, ஆப்பிள் நிறுவனம், அறிவுறுத்தி உள்ளது.

இவ்வகை உளவு பொருள், வழக்கமான 'சைபர்' உளவு மென்பொருள்களை விடவும் வலிமையானது எனவும், இவை குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் சாதனங்களை மட்டும் குறிவைக்கும் எனவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

பயனர்கள், இத்தகைய தாக்குதலிலிருந்து தப்பிக்க வாடிக்கையாளார்கள், தங்கள் ஐபோன்களில் உள்ள 'லாக்டவுன்' வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எந்த ஒரு லிங்க்'கையும் திறப்பதை தவிர்க்குமாறும், ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us