sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'பார்தி ஹெக்சாகாம்' பங்கு வெளியீடு

'பார்தி ஹெக்சாகாம்' பங்கு வெளியீடு

'பார்தி ஹெக்சாகாம்' பங்கு வெளியீடு


ADDED : மார் 26, 2024 12:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 12:16 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : 'பார்தி ஏர்டெல்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'பார்தி ஹெக்சாகாம்' ஏப்ரல் 3ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, 2025ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுக்கு வரும் முதல் நிறுவனமாகிறது, பார்தி ஹெக்சாகாம்.

இந்த பங்கு வெளியீட்டின்போது முழுக்க முழுக்க பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. கிட்டத்தட்ட 7.50 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அதன் வாயிலாக நிதி திரட்டப்பட உள்ளது.

பார்தி ஹெக்சாகாம் நிறுவனம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில், தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த செப்டம்பர் 2023 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2.90 கோடியாகும். கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 5,420 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 281 கோடி ரூபாய்.

இந்நிறுவனத்தின், 70 சதவீத பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான டி.சி.ஐ.எல்., மீதமுள்ள 30 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 15 கோடி பங்குகளில், 50 சதவீதம் அதாவது 7.5 கோடி பங்குகளை, டி.சி.ஐ.எல்., விற்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us