ADDED : ஜூலை 26, 2024 12:36 AM

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில், நீண்டகால மூலதன ஆதாய வரி விகிதம், 10 சதவீதத்தில் இருந்து 12.50 சதவீதமாக உயர்த்தப்பட்டதோடு, இண்டெக்சேஷன் வாய்ப்பும் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பை நீக்கியதால் தங்களுக்கு லாபமா, நஷ்டமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கோ, இண்டெக்சேஷன் என்றால் என்ன என்பது குறித்தே முழுமையான புரிதல் இல்லை.
அது என்ன இண்டெக்சேஷன்?
இந்த ஆங்கிலச் சொல்லை, 'விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்ட வளர்ச்சி' என்று கொஞ்சம் விரிவாகத் தான் சொல்ல வேண்டும்.
அதாவது, நீங்கள் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை படிப்படியாக உயரும் அல்லவா? இந்த விலை உயர்வுக்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமான காரணங்களாக இருக்கும்.
ஒன்று, உண்மையான மதிப்பு உயர்வு. இரண்டாவது, பணவீக்கம்.
இதில் பணவீக்கம் என்பது, நம்மை போன்ற சாதாரணமானவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவது கிடையாது. பணவீக்கம் கூடுவதும், குறைவதும் நம் கையில் இல்லை. அதனால், அந்த பணவீக்கத்தின் சுமையை மக்கள் மீது சுமத்தக்கூடாது அல்லவா?
இங்கே தான் இண்டெக்சேஷன் வருகிறது.
எப்படி கணக்கிடுவது?
உதாரணத்துடன் பார்ப்போம். நீங்கள் 2001ல் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டின் விலை 10 லட்சம் ரூபாய் என்றும் வைத்துக் கொள்வோம்.
அந்த வீட்டை இப்போது, அதாவது 2024ல் விற்பனை செய்கிறீர்கள். இப்போது அந்த வீட்டின் விலை 50 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டது.
வீட்டை விற்பதால் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? விற்பனை விலையில் இருந்து, வாங்கிய விலையை கழித்தால், கிடைப்பது தான் லாபம்.
ஆனால், அந்த வீட்டின் விலை உயர்ந்து லாபம் கிடைப்பதற்கு, நாம் மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்கள் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. அப்படியானால், பணவீக்கத்தை எப்படி கணக்கில் கொண்டு வருவது?
பணவீக்க குறியீடு
இதற்கு தான் மத்திய அரசின் வருமான வரித் துறை ஒவ்வொரு ஆண்டும், விலை பணவீக்க குறியீடு (காஸ்ட் இன்பிளேஷன் இண்டக்ஸ்) என்ற மதிப்பை வெளியிட்டு வருகிறது. இந்தக் குறியீடு, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அதை குறிப்பதாக இருக்கும்.
இதற்கு முன் 1981ம் ஆண்டை, 'பேஸ் இயர்' எனப்படும் அடிப்படை ஆண்டாக வைத்து, ஒவ்வொரு ஆண்டும் குறியீட்டின் மதிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு, அடிப்படை ஆண்டாக மாற்றப்பட்டது. 2001ல் இந்த குறியீட்டின் மதிப்பு 100 புள்ளிகள். அதுவே 2024 -- 25 நிதியாண்டில், 363 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இண்டெக்சேஷன் சூத்திரம்
இப்போது இண்டெக்சேஷன் கணக்கிடுவது எப்படி என்று பார்ப்போம்.
அதற்கான சூத்திரம் இது தான்: வாங்கிய விலை x விற்பனை செய்யும் ஆண்டின் இண்டெக்சேஷன் மதிப்பு புள்ளி / வாங்கிய ஆண்டின் இண்டெக்சேஷன் மதிப்பு புள்ளி.
இப்போது நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தையே தொடருவோம்.
நீங்கள் 2001ல், 10 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பு 2024ல் எவ்வளவு?
நீங்கள் வாங்கிய வீட்டை 50 லட்சத்துக்கு விற்பனை செய்கிறீர்கள். இதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய நீண்டகால மூலதன ஆதாய வரியை கணக்கிடுவோம்
இந்த 13.70 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் 20 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தினால் போதும். அதாவது, 2.70 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும்.
இந்த வரியையும் செலுத்த வேண்டாம் என்று கருதினீர்கள் என்றால், இந்த மொத்த தொகையும், வேறொரு வீடு வாங்குவதற்கு செலவிட வேண்டும்.
அல்லது,
மூலதன ஆதாயத்துக்கான பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
நஷ்டத்தில் விற்றால்?
ஒருவேளை, நீங்கள் வாங்கிய வீட்டை நஷ்டத்துக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக,
உங்கள் வீடு 25 லட்சம் ரூபாய்க்குத் தான் விற்பனை ஆயிற்று என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், உங்களுக்கு மூலதன நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
அது எவ்வளவு?
இந்த நஷ்டத்தை காட்டி, வரிச் சலுகை பெறலாம்.
இப்போது எல்லாம் மாறியாச்சு
மேலே இதுவரை கூறியதுதான் இதுநாள் வரை இருந்து வந்த நடைமுறை. ஆனால், இப்போது வரி கணக்கிடுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இந்த இண்டெக்சேஷன் மதிப்பு கணக்கிடல் என்பதெல்லாம் தேவையில்லை. நீங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு வீட்டை வாங்கி, 50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளீர்கள்.
எனவே, லாபம் 40 லட்சம் ரூபாய். இந்த 40 லட்சம் ரூபாய்க்கு, மூலதன ஆதாய வரி 12.50 சதவீதம். அதாவது 5 லட்சம் ரூபாய்.
கணக்கிடுவது வெரி சிம்பிள்! ஆனால் செலுத்தும் தொகை?
உயர்த்தப்பட்டது 12.50 சதவீதம் போல் தெரிந்தாலும், உண்மையில் கட்ட வேண்டியது 14.95 சதவீதம்! அதாவது மேல் வரி, தீர்வை என எல்லாம் சேர்த்து 14.95 சதவீதத்தை வரியாக கட்ட வேண்டும்.
அனைத்துக்கும் பொருந்தும்
மூலதன ஆதாய வரி செலுத்துவது என்பது தங்கம், பங்குகள், மியூச்சுவல் பண்டு என அனைத்துக்கும் உண்டு.
10,00,0000 x 363
100
= 36,30,000
மூலதன ஆதாயம்
50,00,000 - 36,30,000
= 13,70,000
மூலதன நஷ்டம்
36,30,000 - 25,00,000
11,30,000
மூலதன நஷ்டம்
36,30,000 - 25,00,000
= 11,30,000
தற்போதைய மதிப்பு
10,00,0000 x 363
100
= 36,30,000
மூலதன ஆதாயம்
50,00,000 - 36,30,000
= 13,70,000
தற்போதைய மதிப்பு = 10 லட்சம் x 363 / 100 = 36,30,000