தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அதிகரிக்கும் கிரெடிட் கார்டு செலவுகள்

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு செலவுகள்

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு செலவுகள்


ADDED : ஏப் 26, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:ஆன்லைன் வாயிலான கிரெடிட் கார்டு செலவுகள், கடந்த மார்ச் மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் எனும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

நாட்டில், கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு, கடந்த மாதம், 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு மட்டும், 1.04 லட்சம் கோடி ரூபாயாகும். இது பிப்ரவரி மாதத்தில் இருந்த 94,774 கோடி ரூபாயை விடவும், 10 சதவீதம் உயர்வு. மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகமாகும்.

கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் மதிப்பை விடவும், அவற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய கொள்முதல்களுக்கும், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது அதிகரித்திருப்பதை இது உணர்த்துகிறது.

கடந்த மார்ச் நிலவரப்படி, இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை, 10.20 கோடியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us