ADDED : ஜூன் 14, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இன்று முதல், 17ம் தேதி வரை நடத்துகிறது.
இதில், இந்தியா முழுதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
கண்காட்சியில் இயந்திரங்கள், பொருட்கள், அச்சுகள், வார்ப்புகள், அச்சிடுதல் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதனால், புதிய இயந்திரங்கள், 1,000 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.