விமான பராமரிப்பு மென்பொருள் 'ராம்கோ சிஸ்டம்ஸ்' அறிமுகம்
விமான பராமரிப்பு மென்பொருள் 'ராம்கோ சிஸ்டம்ஸ்' அறிமுகம்
ADDED : செப் 11, 2024 11:56 PM

புதுடில்லி:சென்னையை தலைமை யிடமாகக் கொண்ட, மென்பொருள் சேவை நிறுவனமான ராம்கோ சிஸ்டம்ஸ், தனது சமீபத்திய விமானத்துறை மென்பொருளை அறிமுகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
'ஏவியேஷன் சாப்ட்வேர் 6.0' என்ற அந்த மென்பொருள், விமானங்களின் பராமரிப்பு, பழுதுநீக்கம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விமான பராமரிப்பு பணிகளை மின்னணு முறையில் நிர்வகித்தல், விமான பாதுகாப்பு, கருவிகள் ஆகியவற்றை கையாளுதலில் இந்த நவீன மென்பொருள் சிறப்பாக பங்காற்றும் என்றும் கூறியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளரும் சூழலில், விமான பராமரிப்பு, பாதுகாப்பு பிரிவுகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட 'ஏவியேஷன் 6.0' மென்பொருள் இருக்கும் என ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

