சிறிய மின் வர்த்தக வாகனம் முருகப்பா குழுமம் அறிமுகம்
சிறிய மின் வர்த்தக வாகனம் முருகப்பா குழுமம் அறிமுகம்
ADDED : மே 17, 2024 09:56 PM

சென்னை:முருகப்பா குழுமம் மற்றும் 'டி.ஐ., கிளீன் மொபலிட்டி'யின் துணை நிறுவனமான 'டி.ஐ.வி.ஓ.எல்.டி., எலக்ட்ரிக்' வாகன நிறுவனம் இணைந்து, 'மான்ட்ரா' பிராண்டில் மின்சாரத்தில் ஓடும் சிறிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்கிறது.
இது குறித்து, டி.ஐ.ஐ., நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் வெள்ளையன் சுப்பையா கூறியதாவது:
மின்சார வாகன துறை இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுதும் வளர்ச்சி கண்டு வருகிறது. மான்ட்ரா மின்சார வாகனம், நவீன தொழில்நுட்பம், தனித்துவ வடிவமைப்பு, வலுவான செயல்திறனை உடையதாக இருக்கும்.
இதை அறிமுகம் செய்யும்போது, வாடிக்கை யாளர்களிடம் வரவேற்பை பெறும். வாடிக்கையாளருக்கும், வணிகத்திற்கும் பயனளிக்கும் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவது எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஐ.சி.எம்.பி.எல்., நிறுவனம் மின்சார வாகன துறையில், 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், பெரும் பகுதி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட உள்ளது.
