ADDED : ஏப் 28, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஐ.ஆர்.இ.டி.ஏ., எனும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மத்திய அரசின் 'நவரத்னா' அந்தஸ்தை பெற்றுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், அதற்கான நிதி உதவிகளை வழங்குவதற்கும் செயல்பட்டு வரும் வங்கி சாரா நிதி நிறுவனம், ஐ.ஆர்.இ.டி.ஏ., ஆகும். தற்போது, நாட்டில் நவரத்னா அந்தஸ்துடைய மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு, நவரத்னா அந்தஸ்தை வழங்கிவருகிறது.
இந்த நிறுவனங்கள், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, 1,000 கோடி ரூபாய் வரை முதலீடுகளை மேற்கொள்ள முடியும். இவை அவற்றின் மதிப்பில் 30 சதவீதம் வரை, ஓராண்டில் முதலீடு செய்யலாம்.

