ADDED : பிப் 21, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியத்தின் பதவி காலத்தை, மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு சத்தீஸ்கர் ஐ.ஏ.எஸ்., கேடரைச் சேர்ந்த பி.வி.ஆர்., சுப்ரமணியம், 2023ம் ஆண்டு நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக, இரண்டாண்டு கால பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வருகிற 24ம் தேதி யுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

