தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ திருப்பூரில் துவங்கியது 'நிட்ஷோ'

திருப்பூரில் துவங்கியது 'நிட்ஷோ'

திருப்பூரில் துவங்கியது 'நிட்ஷோ'


ADDED : ஆக 10, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:'நிட்ஷோ - 2024' சர்வதேச பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது.

பின்னலாடை தொழிலில், புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி, வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில், 'நிட்ஷோ - 2024' கண்காட்சி, திருப்பூர், காங்கேயம் ரோடு 'டாப் லைட்' மைதானத்தில் நேற்று துவங்கியது.

கண்காட்சி, ஐந்து பிரமாண்ட அரங்குகளில், 400 'ஸ்டால்'களுடன் அமைந்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட நிட்டிங், பிரின்டிங் மற்றும் தையல் இயந்திரங்கள் அணிவகுத்துள்ளன. துணி, நுால், சாயம் மற்றும் பிரின்டிங் 'இங்க்', இயந்திர உதிரி பாகங்கள் போன்றவை காட்சிக்கு இடம்பெற்று உள்ளன.

நாளை வரை கண்காட்சி நடைபெறும். மொத்தம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளதாக, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us