ADDED : செப் 10, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்ப நகரம், நிதிநுட்ப நகரம், பல்கலை ஆராய்ச்சி பூங்கா போன்றவற்றை ஏற்படுத்தி வருகிறது.
இது தவிர, தமிழக ராணுவ தொழில் பெரு வழித்தட திட்டம், பரந்துார் விமான நிலைய திட்டம், சரக்கு போக்குவரத்து சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்ட முகமையாக செயல்படுகிறது.
இத்திட்ட பணிகளை மேற்பார்வையிட்டு, திட்ட அறிக்கை தயாரித்து வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு, ஐந்து பேர் அடங்கிய மேலாண்மை குழுவை நியமிக்க, டிட்கோ முடிவு செய்துள்ளது.
அக்குழுவில், சரக்கு போக்குவரத்து, விமானம், ராணுவம், விண்வெளி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

