sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஒரே நாளில் செட்டில்மென்ட் இன்று முதல் அறிமுகம்

ஒரே நாளில் செட்டில்மென்ட் இன்று முதல் அறிமுகம்

ஒரே நாளில் செட்டில்மென்ட் இன்று முதல் அறிமுகம்


ADDED : மார் 27, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2024 10:59 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில், இன்று முதல் விருப்ப அடிப்படையில், குறிப்பிட்ட சில பங்குகளுக்கு மட்டும், வர்த்தகம் மேற்கொண்ட அதே நாளிலேயே பணத்தை பெறுவதற்கான உடனடி செட்டில்மென்ட் முறை அறிமுகமாகிறது. தற்போதைய நடைமுறையில் வர்த்தகம் மேற்கொண்ட அடுத்த நாள் தான் பணத்தை பெற முடியும்.

ஆரம்பகட்டமாக, குறிப்பிட்ட 25 நிறுவன பங்குகளுக்கும், குறைந்த எண்ணிக்கையிலான தரகர்களுக்கும் மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 'எஸ்.பி.ஐ., பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், நெஸ்லே இந்தியா' உள்ளிட்டவை இந்த 25 நிறுவனங்களில் அடங்கும்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை, வர்த்தக செலவு மற்றும் நேரத்தை குறைக்கவும்; முதலீட்டாளர்களுக்கு கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவும்; பங்குச் சந்தைகளில் ரிஸ்க் மேலாண்மையை வலுப்படுத்தவும் உதவும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது பரிவர்த்தனை அபாயங்களை கணிசமாகக் குறைப்பதோடு, வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உடனடியாக முதலீட்டின் மதிப்பை வழங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us