ADDED : செப் 05, 2024 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில், ஆகஸ்டில் அதிகரித்துள்ளது.
சேவைகள் துறையைச் சேர்ந்த 400 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, எச்.எஸ்.பி.சி., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் 60.30 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 60.90 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். கடந்த மார்ச் மாதத்துக்குப் பின், ஆகஸ்ட் மாதத்தில் தான் வளர்ச்சி அதிகரித்துள்ளது. புதிய ஆர்டர்கள், குறிப்பாக உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில், சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் அதிகரித்துள்ளது