தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பங்கு சந்தைகள் இன்று உண்டு

பங்கு சந்தைகள் இன்று உண்டு

பங்கு சந்தைகள் இன்று உண்டு


ADDED : மே 17, 2024 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., பங்குச் சந்தைகள் இன்று சிறப்பு வர்த்தக அமர்வை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

பேரிடர் போன்ற காரணங்களால், பங்குச் சந்தையின் வர்த்தகத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், உடனடியாக வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை, நாட்டின் வேறு ஒரு இடத்திலும் சந்தைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த மாற்று ஏற்பாடுகள் சரியாக உள்ளதா, எதிர்பாராத நிகழ்வுகளை கையாள, சந்தைகள் தயாராக இருக்கின்றனவா என்பதை சோதித்து பார்ப்பதற்காக இந்த சிறப்பு அமர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கு முன், இதே போன்றதொரு ஒத்திகையை கடந்த மார்ச் 2ம் தேதியன்று பங்குச் சந்தைகள் மேற்கொண்டன. இன்று வர்த்தகம் காலை 9:15 மணிக்கு துவங்கி 10:00 மணி வரையிலும், பின் நண்பகல் 11:30 மணிக்கு துவங்கி, 12:30 வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் சந்தைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us