ADDED : மே 08, 2024 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., பங்குசந்தைகள் வரும் 18ம் தேதி சனிக்கிழமையன்று, சிறப்பு வர்த்தக அமர்வை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
பேரிடர் போன்ற காரணங்களால், பங்குச் சந்தையின் வர்த்தகத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், உடனடியாக வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை, நாட்டின் வேறு ஒரு இடத்திலும் சந்தைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாற்று ஏற்பாடுகள் சரியாக உள்ளதா, எதிர்பாராத நிகழ்வுகளை கையாள சந்தைகள் தயாராக இருக்கின்றனவா என்பதை சோதித்து பார்க்குமாறு, செபி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த சிறப்பு அமர்வு நடத்தப்பட உள்ளது.

