தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஆச்சரியப்படுத்திய சர்க்கரை உற்பத்தி

ஆச்சரியப்படுத்திய சர்க்கரை உற்பத்தி

ஆச்சரியப்படுத்திய சர்க்கரை உற்பத்தி


ADDED : மே 19, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:தற்போதைய பருவத்தில், சர்க்கரை உற்பத்தி 315 லட்சம் டன்னை எட்டி யுள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், உற்பத்தி அதிகரித்திருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய சர்க்கரை சந்தைப்படுத்துதல் பருவத்தில், இதுவரை 314.9 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. முழு பருவமான அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி 317 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டா வது காலகட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள், சர்க்கரை உற்பத்தி இலக்கை எட்ட உதவி செய்துவிடும் என்பதால், பற்றாக் குறையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சர்க்கரை பருவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை, மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கவனிக்க முடிந்தது.

அதாவது, மஹாராஷ்டிராவில் கடந்த பருவத்தில் 105 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, நடப்பாண்டில் 92 லட்சம் டன்னாக குறையும் என அதிகாரிகள் மதிப்பிட்டிருந்தனர். ஆனால், மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகரித்து, 110 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

இதேபோன்று உத்தர பிரதேசத்திலும் 115 லட்சம் டன்னாக உற்பத்தி இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், 103 லட்சம் டன்னை இதுவரை எட்டியுள்ளது. கடந்த பருவத்தில் இது 104 லட்சம் டன்னாக உற்பத்தி இருந்தது.

சர்க்கரை உற்பத்தி 317 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை 315 லட்சம் டன் எட்டப்பட்டு விட்டது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us