
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'செயின்ட் கோபைன்' சந்தானம் மே மாதம் ஓய்வு பெறுகிறார்
'செயின்ட் கோபைன்' நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பி.சந்தானம், வரும் மே மாதம் 5ம் தேதி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக தொழில்துறை வட்டாரங்களில் மிகவும் பிரபலமான இவர், கடந்த 45 ஆண்டு காலமாக செயின்ட் கோபைன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
வரும் காலங்களில் தன் அனுபவங்களைக் கொண்டு, வளர்ந்த நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவின் பயணத்தில் முக்கிய பங்காற்ற விரும்புவதாக, அவர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மாநிலத்தில் 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, சந்தானம் தலைமையிலான செயின்ட் கோபைன் நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.