ADDED : செப் 18, 2024 12:25 AM

நியூயார்க்: காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பிரபலமான டப்பர்வேர் நிறுவனம், அதன் திவால் அறிவிப்பை, இந்த வாரத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், 1946ல் எர்ல் டப்பர் என்பவரால் துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் தயாரித்த பொருட்கள், பெண் முகவர்களால் நேரடியாக உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, அவற்றின் தேவை குறைந்ததால், தொழிற்சாலையை மூடப்போவதாக கடந்த ஜூனில் அறிவித்தது.
திவால் அறிவிப்புக்கான நடவடிக்கைகளை துவங்கிய நிலையில், தன் 5,800 கோடி ரூபாய் கடனை நிர்வகிக்க, கடன் வழங்கும் நிறுவனங்களுடன் டப்பர்வேர் பேச்சு நடத்தியது. கடன் வழங்க உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், தேவை பெரிதும் குறைந்ததால் நிறுவனத்தின் நிலைமை மோசமானது.
இதையடுத்து, அமெரிக்க நீதிமன்றத்தில், திவால் நடைமுறைக்கான ஆவணங்களை, இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
