ADDED : ஏப் 09, 2024 06:37 AM

புதுடில்லி : இந்தியாவைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனமான 'கொச்சின் ஷிப்யார்டு', அமெரிக்க கடற்படை கப்பல்களை பழுதுபார்க்க, அந்நாட்டு கடற்படையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது முற்றிலும் ஒரு நிதி சாரா ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்பு துறைக்கு கப்பல் போக்குவரத்து வசதிகளை வழங்கி வரும் அமைப்பு, அந்நாட்டு கடற்படையின் கீழ் இயங்கி வரும் 'மிலிட்டரி சீலிப்ட் கமாண்டு'
இதில் பயன்படுத்தப்படும் கப்பல்களை, இந்தியாவில் பழுதுபார்க்க, தற்போது கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரியில், கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், இந்திய கடற்படையின் இரண்டு கடற்படைக் கப்பல்களின் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் வெளிவந்ததை அடுத்து, கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
நேற்று வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 5.62 சதவீதம் அதிகரித்து 1,142 ரூபாயாக இருந்தது.
