ADDED : அக் 20, 2024 02:09 AM

சென்னை:சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாசு ஏற்படுத்தாமல் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய உள்ளது. இதற்காக, தமிழக பசுமை காலநிலை நிதியம் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தில் அரசின் முதலீடு, 100 கோடி ரூபாய் உட்பட, 2,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்.
அந்த நிதியில் இருந்து பசுமை மின் திட்டங்கள், மின்சார வாகனங்கள் போன்ற பசுமை தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும். நிதியத்துக்காக, அரசு தன் பங்கான, 100 கோடி ரூபாயை விடுவித்துஉள்ளது.
இந்த நிதியத்தை, தமிழக உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது. தற்போது, பல்வேறு நிறுவனங்களும் நிதியத்தில் நிதியுதவி கேட்டு விண்ணப்பித்து வருகின்றன.அதை பரிசீலித்து, தகுதியான நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.