17 லட்சம் வெள்ளி நகைகளுக்கு மூன்றே மாதங்களில் ஹால்மார்க்
17 லட்சம் வெள்ளி நகைகளுக்கு மூன்றே மாதங்களில் ஹால்மார்க்
ADDED : டிச 07, 2025 01:10 AM

வெ ள்ளி பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள குறியீடு அமல்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிலேயே, 17 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஹால்மார்க் முத்திரை பெற்ற ஒவ்வொரு வெள்ளி நகை மற்றும் கலைப்பொருளுக்கும் தனித்துவமான ஆறு இலக்க ஹால்மார்க் அடையாள எண் பெறுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
முக்கிய தகவல்கள்
*ஹால்மார்க் முத்திரை பெறுவதில் தென்மாநிலங்கள் முன்னிலை
* பி.ஐ.எஸ்., கேர் மொபைல் செயலி வாயிலாக ஹால்மார்க் பெற்ற வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள குறியீட்டை பெறலாம்
* ஹால்மார்க் குறியீடு பெற்றதில் 90 சதவீதம், 925 மற்றும் 800 துாய்மை தரத்தில் உள்ள வெள்ளி பொருட்கள்.
எவ்வளவு வெள்ளி பொருட்களுக்கு ஹால்மார்க் குறியீடு
2024 - 25: 32 லட்சம்
2025 (செப்., - நவ.,): 17.35 லட்சம்
அதிகம் ஹால்மார்க் செய்யப்பட்டவை
கொலுசுகள்
வெள்ளி அகல்கள்

